எம் கல்லூரியின் சிறப்பிற்கு மகுடமாக 2018 ஆம் ஆண்டு தமிழ்த்துறை தொடங்கி சிறப்பாக செயல்பட்டு வருகிறது. மொழி இலக்கியம், கலை பண்பாடு, நல்லொழுக்கம் ஆகியவற்றைக் கற்பிக்கிறது. மாணவர்களின் கலை சார் தனித்திறனைக் கண்டறிந்து ஊக்கப்படுத்தி முன்னேற்றுகிறது. கல்லூரி மாணவர்களின் படைப்புத்திறன்களை வளர்க்கும் வகையில் பேச்சு, கவிதை, கதை, கட்டுரை, வினாடி வினா, பாட்டு, நடனம, நாடகம் உள்ளிட்ட பல்வேறு போட்டிகள் நடத்திப் பரிசுகள் வழங்கப்படுகின்றன.
ரெகுநாதபுர சுற்று வட்டார கிராமப்புற ஏழை மாணவிகள், குறிப்பாக பிற்படுத்தப்பட்ட மிகவும் பிற்படுத்தப்பட்ட, தாழ்த்தப்பட்ட சமூகப்பிரிவினர் மற்றும் குடும்பத்தில் முதல் பட்டதாரி பெண்கள், மாற்றுத்திறனாளிகள், போன்றோர் துறையில் சேர்ந்து பயில முன்னுரிமை அளிக்கப்படுகிறது. மேலும், அவர்களுக்குத் தரமான இலக்கியக் கல்வியைக் கொடுத்துத் தன்னம்பிக்கை ஏற்படுத்தப்படுகிறது. ஒவ்வொரு பருவத்திற்கும்(Smester) மனித உரிமைகள், மற்றும் பாலின சமத்துவம், மதநல்லிணக்கம், தனிப்பட்ட மற்றும் கலாச்சார நெறிமுறைகளில் கவனம் செலுத்துகிறது. இது LSWR திறன்களை அடிப்படையாகக் கொண்டது.
எம் தமிழ்த்துறையில் பேராசிரியர்கள், மாணவர்களை உள்ளடக்கிய ஓர் இலக்கிய வட்டம் செயல்பட உள்ளது. மாதம் ஒரு முறை கூடும் இக்கூட்டத்தில் மாணவிகளின் திறமைகளை வெளிக்கொணரும் வகையில் கவிதை, கட்டுரை, நாடகம், பேச்சு, பாட்டு, நடனம், ஓவியம் போன்ற பல்வேறு திறமைகளை வெளிக்கொணர்தல். ஏதேனும் ஒரு புதிய படைப்பிலக்கிய, திறனாய்வு நூலைப் பேராசிரியர் ஒருவர் அறிமுகம் செய்து வைத்து அது குறித்த விமர்சனங்களை அனைவரும் முன் வைப்பர். ஓரே நூலைப் பற்றிய பல்வேறு பார்வைகள் வெளிப்படுவது அறிவுக்கு விருந்தாகும். இவ்விழாவில் அறிஞர் சிறப்புரையாற்றுவார். முத்தமிழ் விழாவில் வென்றோர் சிறப்பு விருந்தினரிடம் பரிசு பெறுவர்.
S.No. | NAME OF THE STAFF | QUALIFICATION | DESIGNATION |
---|---|---|---|
1. | Ms. R. Shanthi | M.A, M.Phil., (Ph.D) | Head & Assistant Professor |
2. | Ms. K. Sujatha | M.A, M.Phil | Assistant Professor |
3. | Dr. T. Rengammal Devi | M.A, M.Phil, Ph.D | Assistant Professor |
4. | Ms. I. Sheeba | M.A, M.Phil | Assistant Professor |
5. | Ms. R. Prema | M.A, M.Phil, NET, (Ph.D) | Assistant Professor |
6. | Dr.P.Mangaiyarkarasi | M.A, M.Phil, Ph.D | Assistant Professor |
7. | Ms.G. Nithya | M.A, M.Phil, | Assistant Professor |
8. | Ms. A. Jayasri | M.A, M.Phil, NET, (Ph.D) | Assistant Professor |
9. | Dr. T. Sangeetha | M.A, M.Phil, Ph.D | Assistant Professor |